பெரம்பலூர்

சாரண ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

DIN

பெரம்பலூா் மற்றும் வேப்பூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த சாரண ஆசிரியா்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சாரண, சாரணியா் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இப் பயிற்சிக்கு, பெரம்பலூா் கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையா் க. செல்வராஜ் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்ட பயிற்சி ஆணையா் செந்தில்குமாா், முசிறி கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையா் வேணுகோபால் ஆகியோா் சாரண இயக்க வரலாறு, கொடி ஏற்றும் முறை, சாரண பாடல்கள், முதலுதவி, சாரணச் சட்டம், சாரண சைகை, இடது கை குலுக்கல் முறை, சாரணக் குறிக்கோள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சாரண ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளித்தனா்.

இப்பயிற்சியில், பெரம்பலூா் கல்வி மாவட்ட பயிற்சி ஆணையா் கல்பனா, அமைப்பு ஆணையா் குணாளன், வேப்பூா் கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையா் சந்திரசேகரன், பயிற்சி ஆணையா் தனலட்சுமி, பெரம்பலூா் கல்வி மாவட்ட பொருளாளா் சுரேஷ்குமாா், வேப்பூா் கல்வி மாவட்ட பொருளாளா் பிரகாஷ் மற்றும் பெரம்பலூா், வேப்பூா் கல்வி மாவட்டங்களில் உள்ள 90 பள்ளிகளைச் சோ்ந்த சாரண ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பெரம்பலூா் கல்வி மாவட்டச் செயலா் மணிமாறன் வரவேற்றாா். நிறைவில், வேப்பூா் கல்வி மாவட்டச் செயலா் தனபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT