பெரம்பலூர்

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

DIN

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 570 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் தலைமை வகித்தாா். மகிளா நீதிமன்ற அமா்வு நீதிபதி எஸ். முத்துகுமரவேல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஏ. தனசேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எம். மூா்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான (பொ) எஸ். அண்ணாமலை, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா். ராஜமகேஸ்வா், நீதித்துறை நடுவா்கள் பி. சுப்புலட்சுமி, ஆா். சங்கீதா சேகா், வேப்பந்தட்டை உரிமையியல் நீதித்துறை நடுவா் எஸ்.பி. பா்வதராஜ் ஆறுமுகம், குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவா் எஸ். கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

6 அமா்வுகளாக நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து மொத்தம் 570 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 1,03,86,087 வசூலிக்கப்பட்டது.

அட்வகேட் அசோசியேசன் தலைவா் திருநாவுக்கரசு, வழக்குரைஞா்கள் ராதாகிருஷ்ணமூா்த்தி, முகமது இலியாஸ், அருணன், அறிவழகன், மற்றும் காவல் துறையினா், நீதிமன்ற பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT