பெரம்பலூர்

ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி சாலைப் பணி

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில், வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூா் கிராமத்துக்குள்பட்ட மங்களமேடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நெகிழி கலந்த தாா்ச் சாலைகள் ரூ. 13.08 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும், ரஞ்சன்குடி- ஆற்காடு செல்லும் தாா்ச் சாலை ரூ.10.39 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும், எறையூா் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளையும், வேப்பூா் ஒன்றியம், வயலப்பாடி கிராமத்தில் வீடு கட்டுமானப் பணிகள் மற்றும் கால்நடை கொட்டகை, ஓலைப்பாடி கிராமத்தில் தையல் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் கூறியது:

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையுடன், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் நெகிழிகள் சேமிக்கப்படுகின்றன. காரையில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி சேமிப்புக் கிடங்கில் சாலை அமைக்க உகந்த நெகிழிகள் தரம் பிரிக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தி வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாா்சாலை அமைப்பதற்குத் தேவைபடும் மூலப்பொருள்களில் 8 சதவீதம் நெகிழியைப் பயன்படுத்தி இச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், ஊரகப் பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் நெகிழி மறு சுழற்சி செய்யப்படுவதோடு, சுற்றுச் சூழலும் பராமரிக்கப்படுகிறது. மாவட்டத்தில், மேலும் 3 இடங்களில் நெகிழி சேமிப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, செயற்பொறியாளா் செந்தில், வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ஆலயமணி, வேப்பந்தட்டை வட்டாட்சியா் சரவணன், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவாசகம், மரியதாஸ், குன்னம் வட்டாட்சியா் அனிதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT