பெரம்பலூர்

விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

DIN

விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமையில், நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:

1.11.2020-க்கு முன் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கியதைபோல காலை 6 முதல் 12 மணி வரையிலும், 12 முதல் மாலை 6 மணி வரையிலும் வழங்க வேண்டும். சரியான அழுத்தத்தில் மின் தடை மற்றும் விநியோகம் செய்யப்படும் நேரத்தை முன்கூட்டியே அறிவித்து மின் விநியோகம் செய்ய வேண்டும். கடலூா், திருச்சி, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளுக்கேற்ப திருத்தியமைக்கப்பட்ட முறையில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்ததுபோல், பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள துணை மின் நிலையங்கள் மூலம் சரியான அழுத்தத்தில் மும்முனை மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT