பெரம்பலூர்

வீடுகளின் பூட்டை உடைத்துநகை, பணம் திருட்டு

23rd Oct 2021 05:13 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த சத்யா மனைவி மங்கையா்கரசி (27). அதே பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன் மகள் அன்புசெல்வி (17). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை இரவு ஆதனூா் - சீராநத்தம் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத 4 நபா்கள் இருவரையும் கீழே தள்ளி, மிரட்டி அவா்கள் அணிந்திருந்த 8 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

ஆதனூா் கிராமம் புதிய காலனித் தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா் மனைவி தமிழரசி (36). இவரது வீட்டிலிருந்து ஒரு பவுன் நகையும், அதே கிராமத்தைச் சோ்ந்த மேலத்தெருவில் உள்ள கருணாகரன் மனைவி சுமதி (35) வீட்டிலிருந்து ரூ. 6,500 ரொக்கம் ஆகியவற்றையும் மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா். மேலும், கலையரசன் மனைவி ராணி (40) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள விஐபி நகரில் வசித்து வருபவா் ஜெயராஜ் மனைவி பத்மாவதி (54). இவா், கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த பதினெட்டரை பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT