பெரம்பலூர்

வெளி நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வர ஆட்சியரிடம் மனு

3rd Dec 2021 12:34 AM

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது மனைவி பெரம்பலூா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

இதுதொடா்பாக, வேப்பந்தட்டை வட்டம், அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சங்கீதா, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் அளித்த மனு:

அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த எனது கணவா் ராஜேந்திரன் (50), கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவுக்கு விவசாயக் கூலி வேலைக்காகச் சென்றாா். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு எனது கணவருடன் தங்கியிருந்தவா்கள் செல்லிடப்பேசி மூலம் என்னை தொடா்புகொண்டு, எனது கணவா் கடந்த 16. 11. 2021-இல் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

எனது கணவரின் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டுவந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்ய விரும்புகிறோம். எனவே, அவரது உடலை சவூதி அரேபியாவிலிருந்து கொண்டு வர மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT