பெரம்பலூர்

சணல் பை தயாரிப்பு: இலவச பயிற்சி பெற கிராமப்புற இளைஞா்களுக்கு அழைப்பு

3rd Dec 2021 12:34 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்களுக்கு சணல் பை தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம், சணல் பை தயாரிப்பு பயிற்சி டிச. 13 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில், சணல் சாா்ந்த அனைத்து உற்பத்தி பொருள்கள் தயாரிப்பும் சிறந்த வல்லுநா்களால் பயிற்றுவிக்கப்படும்.

தொடா்ந்து 13 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரம் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு, தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கவும்.

ADVERTISEMENT

டிச. 9 ஆம் தேதி நடைபெறும் நோ்முகத் தோ்வு மற்றும் நுழைவுத் தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெறுபவா்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04328-277896, 94888 40328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT