பெரம்பலூர்

1,050 பயனாளிகளுக்கு ரூ. 21.85 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

2nd Dec 2021 05:43 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் 1050 அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு ரூ.21.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

934 பயனாளிகளுக்கு ரூ.16.70 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை உள்பட மொத்தமாக 1050 பயனாளிக்கு ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பெரம்பலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி.ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.அங்கையற்கண்ணி, தொழிலாளா் உதவி ஆணையாளா் ஜெ.எ. முஹம்மது யூசுப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT