பெரம்பலூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தைபயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

DIN

பெரம்பலூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, விற்பனைக் குழுச் செயலா் ஜெயக்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் -வடக்கு மாதவி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், புதன்கிழமை தோறும் பருத்தி, மக்காச்சோளம் மறைமுக ஏலமும், சனிக்கிழமை தோறும் எள், இதர வேளாண் விளைபொருள்களுக்கான மறைமுக ஏலமும் நடைபெறுகிறது. இதில், உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் இடைத் தரகின்றி, சரியான எடையுடன் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்கின்றனா். விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள வேளாண் விளைபொருள்களை உலா்த்திக்கொள்ள உலா் களம் வசதியும் உள்ளது. மேலும், விளைபொருள்களை 6 மாதம் வரை இருப்பு வைத்துக்கொள்ள வாடகை அடிப்படையில் நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன்பெறும் வசதியும் உள்ளது. எனவே, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளை பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT