பெரம்பலூர்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சாா்பில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். கல்வியை மாநில பட்டியலிலிருந்து அபகரிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் வீ. ஞானசேகரன், முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் ப. காமராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில விவசாய அணிச் செயலா் வீர. செங்கோலன், மதிமுக மாவட்டச் செயலா் செ. துரைராஜ், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT