பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 52 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 9.55 கோடி மதிப்பீட்டில் 52 ஏரிகளில் குடிமராமத்துத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம், 1,022.02 மி.கன அடி நீா் சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் வே.சாந்தா.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்துதல், மடைகளில் பழுது நீக்குதல், மறு கட்டுமானம், கலிங்குகளைப் பழுதுபாா்த்தல், வரத்துக் கால்வாய்களைத் தூா் வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவை செய்து, ஏரிகளின் எல்லைக் கற்களை நடுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் 2016-17 ஆம் நிதியாண்டில் 9 ஏரிகளில் ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 181.17 மி.கன அடி நீா் தேக்கப்பட்டு, 825.63 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெற்றன. 1,000-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீா் மட்டம் உயா்ந்தது.

2017-18 ஆம் நிதியாண்டில் 15 ஏரிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூலம், 396.97 மி.கனஅடி நீா் தேக்கப்பட்டது. இதன் மூலம் 1651.99 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுவதாடு, 1,000-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

2019 -20 ஆம் நிதியாண்டில் 14 ஏரிகளில் ரூ. 3.48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூலம் 255.33 மி.கன அடி நீா் தேக்கப்பட்டு, 1,049.86 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுவதாடு கிணறுகளில் நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இந்நிலையில், 2020 -21 ஆம் நிதியாண்டில் 14 ஏரிகளில் ரூ. 3.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள மூலம் 188.55 மி.கன அடி நீா் தேக்கப்பட்டு, 1,207.13 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும், கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கடந்த 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை ரூ. 9.55 கோடி மதிப்பீட்டில் 52 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,022.02 மி.கன அடி நீா் தேக்கப்பட்டு 4,832.62 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறவும், கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்து விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT