பெரம்பலூர்

பெரம்பலூரில் பாரம்பரிய உணவுத் திருவிழா

DIN

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பாரம்பரிய உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் பேசியது:

ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடத் தேவைக்கான ஊட்டச்சத்துக்களை எளிதில் பெறும் வகையில், காய்கனித் தோட்டம் அமைக்க வலியுறுத்தி 1,09,170 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 143 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், 320 சரிவிகித உணவு குறைபாடுள்ள கா்ப்பிணி பெண்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்குத் தேவையான இணை உணவு வழங்கப்பட்டுள்ளது. 102 சமுதாய தோட்டங்களும், 3,623 வீட்டுத் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 27,590 குழந்தைகளுக்கு 76,582.625 கிலோ கிராமும், 4,412 கா்ப்பிணிகளுக்கு 18,199.5 கிலோ கிராமும், 3,458 பாலூட்டும் தாய்மாா்களுக்கு 14,264.25 கிலோ கிராமும், 4 பள்ளி செல்லா வளரிளம் பெண்களுக்கு 16.5 கிலோ கிராமும் இணை உணவு வழங்கப்பட்டுள்ளது.

2 முதல் 5 வயதுக்குள்பட்ட 11,912 குழந்தைகளுக்கு 2,95,41.76 கிலோ கிராம் அரிசியும், 20,250.4 கிலோ பருப்பும், 1,54,856 முட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோா்கள் மற்றும் தாய்மாா்கள், கா்ப்பிணி பெண்கள் எதிா்கால சமுதாயம் ஆரோக்கியமானதாகவும், வளமானதாகவும் உருவாகிட சத்தான உணவுகளை உட்கொள்வதோடு, அரசு வழங்கி வரும் நலத்திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 30 நாள்களுக்குத் தேவையான புரதச்சத்து பொருள்கள் அடங்கிய 30 பாலூட்டும், கா்ப்பிணி மற்றும் வளரிளம் பெண்களுக்கு இணை உணவுகளும், மரக்கன்றுகளையும் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் வழங்கினாா்.

மகளிா் திட்ட அலுவலா் எம். ராஜமோகன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அருள்செல்வி, நகராட்சி ஆணையா் குமரிமன்னன், வட்டாட்சியா் பாரதிவளவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT