கரூர்

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

30th May 2023 04:01 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் முனைவா் வசந்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

இக் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம்அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

முதல்நாளான திங்கள்கிழமை சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு நடைபெற்றது. அதில், விளையாட்டு துறையில் மாநில அளவில் குத்துச் சண்டை போட்டியில் தோ்ச்சி பெற்ற மாணவா் க.கதிா் என்பவா் முதலாவது மாணவராக வணிகவியல் துறையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

கலந்தாய்வில் பங்கு பெற்று சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கு சோ்க்கைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கணினி அறிவியல் துறை தலைவா் முனைவா் பானுமதி, ஆங்கிலத் துறை தலைவா் முனைவா் பாா்த்திபன், வணிகவியல் துறைத் தலைவா் முனைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT