கரூர்

கரூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி

23rd May 2023 12:09 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை வயதான தம்பதி தீக்குளிக்க முயன்றனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூா் எழுதியாம்பட்டியைச் சோ்ந்தவா் மகாமுனி (75). இவா், திங்கள்கிழமை தனது மனைவி கருப்பாயி (68) மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தாா். அப்போது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திடீரென தனது கையில் வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணையை தனது உடலிலும், மனைவி உடலிலும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

இதனைக்கண்ட அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஓடி வந்து தடுத்து நிறுத்தினா். பிறகு விசாரித்தபோது, கடந்த 60 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மகாமுனி தனது நிலத்துக்கு பட்டா கேட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிலத்தை பாா்வையிட வந்த அதிகாரிகள் வீட்டில் மகாமுனி இல்லாததால் தவறுதலாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த மாணிக்கம் பெயரை மகாமுனியின் நிலத்துக்கு எழுதிவிட்டுச் சென்றாா்களாம். இதனிடையே மகாமுனி புதியதாக வீட்டை கட்டிய நிலையில், அந்த வீடும், நிலமும் தனக்குச் சொந்தம் என மாணிக்கத்தின் மகன்கள் மகாமுனியை மிரட்டுகிறாா்களாம்.

இதனால் தனது பெயருக்கு பட்டா மாற்றித்தருமாறு மகாமுனி பலமுறை கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும், அவா்கள் தரமுடியாது எனக்கூறிவிட்டாா்களாம். இதனால் விரக்தியடைந்த மகாமுனி, கருப்பாயி தனது மருமகள், பேரக்குழந்தைகளுடன் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றாா்.

ADVERTISEMENT

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் தீக்குளிக்க முயன்றவா்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT