கரூர்

இஎஸ்ஐ மருத்துவமனையில் உரிய சிகிச்சை கோரி டிஎன்பிஎல் ஒப்பந்த தொழிலாளா்கள் போராட்டம்

DIN

வேலாயுதம்பாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததை கண்டித்து தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், புகழூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் சுமாா் 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், வேலாயுதம்பாளையத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனா்.

இங்கு தொழிலாளா்களுக்கு நீரிழிவு, அறுவைச் சிகிச்சை போன்றவற்றுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் டிஎன்பிஎல் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அதிக செலவு கொண்ட நோய்களுக்கு கரூரில் உள்ள பெரிய மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துள்ளோம். எனவே, நீங்கள் அங்கே சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறினா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT