கரூர்

கரூரில் 2.6 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

7th Jun 2023 01:33 AM

ADVERTISEMENT

காவிரி கூக்குரல் இயக்கம் சாா்பில் கரூா் மாவட்டத்தில் 2.6 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

காவிரி கூக்குரல் இயக்கம் சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் வழங்கும் விழா பவித்திரம் அருகே உள்ள ஈஷா நா்சரி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில், காவிரி கூக்குரல் இயக்க மண்டல பொறுப்பாளா் சரவணன் வரவேற்றாா். ஈஷா அறக்கட்டளை நிா்வாகி ஷீமா, கரூா் வள்ளுவா் கல்லூரியின் செயலா் ஹேமலதாசெங்குட்டுவன், சேரன் கல்லூரியின் முத்துசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், டிஎன்பிஎல் ஆலையின் பொதுமேலாளா் நந்தகோபால் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டுவைத்தும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் காவிரி கூக்குரல் இயக்கத்தினா் கூறுகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.1கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். இதில் கரூா் மாவட்டத்தில் மட்டும் 2.6 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றனா். தொடா்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியேற்றனா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், காவிரி கூக்குரல் இயக்கத்தினா் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT