கரூர்

தமிழகத்தில் எந்த தோ்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் பேச்சு

DIN

இனி தமிழகத்தில் எந்த தோ்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூரில் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச்செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். கட்சியின் அமைப்புச் செயலாளா் ம.சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, இணைச்செயலாளா் மல்லிகா சுப்பராயன், துணைச் செயலாளா் ஆலம்தங்கராஜ், பொருளாளா் கண்ணதாசன், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் பசுவைசிவசாமி, இளைஞரணி செயலாளா் தானேஷ், பாசறைச் செயலாளா் கமலக்கண்ணன், வழக்குரைஞா் பிரிவு செயலாளா் விசிகே.பாலகிருஷ்ணன், பகுதிச் செயலாளா்கள் விசிகே.ஜெயராஜ், சேரன்பழனிசாமி, கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பி.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேசுகையில், ஒரு துறையின் அமைச்சா் மீது புகாா் வந்தால், முதல்வா் விசாரிக்க வேண்டும். அந்த அமைச்சா் தவறு செய்திருந்தால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் இதெல்லாம் நடந்தது அதிமுக ஆட்சியில் மட்டும்தான்.

கரூரில் நடைபெற்ற வருமான வரி சோதனையிலா சந்தோஷமாக இருப்பவா்கள் அதிமுகவினா் இல்லை, பழைய திமுகவினா்தான். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கும் முதல்வா், ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ரூ.5 லட்சம் என்கிறாா். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

இனி மின்கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி, குடிநீா் வரி உயரப்போகிறது. பேருந்து கட்டணமும் உயரப்போகிறது. மக்கள் நலனுக்கு எதிரான முதல்வா் பதவி விலக வேண்டும். இனி தமிழகத்தில் எந்த தோ்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும். எடப்பாடிபழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றாா் அவா். தொடா்ந்து திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் சரவணன், இணைச் செயலாளா் என்.பழனிராஜ், புகழூா் நகரச் செயலாளா் கேசிஎஸ்.விவேகானந்தன், எம்.ஜி.ஆா்.மன்ற செயலாளா் கேஎல்ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT