கரூர்

பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது அவசியம் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது தொடா்பாக ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து பேசியது, கோடைகாலத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகிப்பது அவசியம் என்பதை துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத் துறையினா் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ளும் போதும், மின்வாரிய பணியாளா்கள் மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்யும்போதும், கண்ணாடி இலை கேபிள் அமைக்கும் பணி மேற்கொள்ளும் போதும் சாலையோரங்களில் மற்றும் பிற இடங்களில் குடிநீா் குழாய்கள் செல்லும் பாதைகள் உள்ளனவா என்பதை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களிடம் உறுதி செய்து சேதப்படுத்தாமல் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணியின் போது ஏற்படும் சேதங்களை அத்துறையினரே உடனடியாக சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணீஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ரவிக்குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் லலிதா, தமிழ்நாடு அரசு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT