கரூர்

ஸ்ரீ சித்தா் கருவூராா் கோயிலில் திருக்குடநன்னீராட்டு விழா நடத்த கோரிக்கை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீ சித்தா் கருவூராா் சன்னதி கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டும் என கருவூா் திருக்கு பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன் தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது : கருவூா் அலங்கார வள்ளி சௌந்திரநாயகி உடனாகிய ஆனிலையப்பராகிய பசுபதீசுவரா் வீற்றிருக்கும் கோயில் வளாகத்தில் பதினென் சித்தா்களுள் ஒருவரான சித்தா் கருவூராா் சன்னதிக் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 2010-ல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்ற நிலையில், தற்போது 13 ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வில்லை. ஆகமவிதிப்படி கோயில்கள் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரமைக்கப்பட்டு, சுதை வேளைகள் செய்து, எண் கூட்டு மருந்து சாத்தி திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டும் என்பதாகும். எனவே அந்த வகையில் கருவூராா் சன்னதிக்கோயில் குடமுழுக்கு விழாவை 2023-ஆம் ஆண்டுக்குள்ளாகவே நடத்த வேண்டும். மேலும் கோயில் தோ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள செயல் அலுவலா் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT