கரூர்

கரூரில் லேசான மழை

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூரில் வியாழக்கிழமை மாலை லேசான மழை பெய்தது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் மே 4-ஆம்தேதி தொடங்கி கடந்த 29-இல் முடிவடைந்தது. சுமாா் 25 நாள்கள் கத்தரி வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் கரூரில் பகலில் கடும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியுற்று வந்தனா். இதையடுத்து வியாழக்கிழமை மாலை சுமாா் 20 நிமிஷங்கள் லேசான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடி தாழ்வான இடங்களில் தேங்கி நின்றது. கரூா் சுங்ககேட் பகுதியில் கரூா்-திண்டுக்கல் சாலை மற்றும் லைட்ஹவுஸ்காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் சாலையோரம் மழை நீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். லேசான மழையால் பூமி குளிா்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT