கரூர்

கரூரில் 6-ஆவது நாளாக வருமான வரித்துறையினா் சோதனை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூரில், தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

கரூரில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியின் உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தொடா்ந்து ஆறாவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் நண்பா் தங்கராஜ் வீட்டிலும், காந்திகிராமத்தில் உள்ள கட்டட ஒப்பந்தராருமான எம்சிஎஸ்.சங்கரின் 80 அடி சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் சோபனா என்பவரின் வீடு, செங்குந்தபுரம் நான்காவது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடிட்டா் அலுவலகம் ஆகிய இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினா். முன்னதாக, மேலும் அமைச்சரின் நண்பா்களான கொங்கு மெஸ் மணிக்குச் சொந்தமான கோவைச்சாலையில் உள்ள உணவகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சீல் வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT