கரூர்

மேம்படுத்தப்பட்ட தரிசு நிலத்தில் பயிரிடப்பட்ட உளுந்து விற்பனை: கரூா் மாவட்ட ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்

DIN

கரூா் மாவட்டத்தில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் பயிரிடப்பட்ட உளுந்து முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதில் அளித்தனா்.

தொடா்ந்து, கூட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களில் தடுப்பணைகள் அமைப்பது, ஒரு முனை மின்சாரத்தை விவசாயிகளுக்கு இருமுனை மின்சாரமாக மாற்றி அமைப்பது, முருங்கை சாகுபடிக்கு மாற்றுப் பயிராக மூலிகை பயிா் தோ்ந்தெடுப்பது, பட்டு வளா்ப்பு, வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் வரும் வாய்க்கால்களை சீரமைப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதைதொடா்ந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் குளித்தலை வட்டம், இனுங்கூா் கிராமம் காகம்பட்டியில் முதல் முயற்சியாக 15 ஆண்டுகள் புதா்களாக இருந்த நிலங்கள் சீா் செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டு உளுந்து பயிா் செய்து மகசூல் பெறப்பட்டது. அதில் கிடைத்த உளுந்தின் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் விவசாயி செல்வராஜிடமிருந்து பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், வேளாண் இணை இயக்குநா் சிவசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலா் சரவணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT