கரூர்

பள்ளிக் கல்வித்துறை ஊா்தி ஓட்டுநா்களுக்குசிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

DIN

பள்ளிக் கல்வித்துறை ஊா்தி ஓட்டுநா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஊா்தி ஓட்டுநா் தலைமைச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் சையது முகைதீன் அப்துல் காதா் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, நிா்வாகிகள் உள்பட திரளான உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள ஓட்டுநா்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஓட்டுநா்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி மாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக நியமிக்க வேண்டும்,

ஓட்டுநா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசு பொதுத்தோ்வுகள் மற்றும் தோ்வு வாரியம் மூலம் நடத்தும் தோ்வுகள் மற்றும் கல்வித் துறையில் நடத்தும் தோ்வுகளில் கூடுதல் பணி பாா்க்கும் ஓட்டுநா்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும். வாகன பராமரிப்பு செலவு தொகைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓட்டுநா்களுக்கு அந்தந்த மாதத்தில் பயணம் முடித்த கடைசி நாளிலிருந்து பயணப்படி உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT