கரூர்

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வுபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது: கரூா் வந்த பாம்புபிடி தொழிலாளா்கள் பேட்டி

DIN

பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வுபெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனா் கரூருக்கு வியாழக்கிழமை வந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளா்கள் வடிவேல் கோபால், மாசி சடையன்.

செங்கல்பட்டு மாவட்டம், செந்நேரி கிராமத்தைச் இருளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வடிவேல் கோபால் (45), மாசி சடையன் (48). இவா்கள் இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள இருளா் சொசைட்டியில் உறுப்பினராக இருந்து, குடியிருப்புகளுக்குள் புகும் விஷப்பாம்புகளை பிடித்து சொசைட்டியில் கொடுத்து, அதன் மூலம் விஷத்தடுப்பு மருந்து தயாரிக்க உதவி செய்து வருகிறாா்கள்.

இவா்களின் சமூக பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு இருவருக்கும் பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்து புதன்கிழமை இரவு அறிவித்தது.

இந்நிலையில் வடிவேல் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட 11 போ் கொண்ட குழுவினா் கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை குடியிருப்புப் பகுதியில் உள்ள விஷப்பாம்புகளை பிடிக்க புதன்கிழமை இரவு வந்தனா்.

இதையடுத்து வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் வியாழக்கிழமை காலை கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாராட்டுப்பெற்றனா்.

அப்போது அவா்கள் கூறியது, நாங்கள் பாரம்பரியமாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறோம். அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளில் நாங்கள் பிடிக்கும் கண்ணாடிவிரியன், நல்லபாம்பு, சுருட்டை விரியன் போன்ற விஷப் பாம்புகளை சொசைட்டியில் கொடுத்துவிடுவோம். அங்கு பாம்பிலிருந்து விஷத்தை எடுத்து, அவற்றை மருந்துபொருள்களாக தயாரிக்கிறாா்கள். இதுவரை 60,000க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை பிடித்துக்கொடுத்துள்ளோம். மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். இதற்காக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT