கரூர்

கரூரில் மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ.33.84 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வங்கிக் கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடா்பாக 528 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு தலா ரூ.7,650 மதிப்பில் மூன்றுசக்கர வண்டி உள்பட பல்வேறு துறையின் கீழ் மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.33லட்சத்து 84 ஆயிரத்து 702 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், திட்ட இயக்குநா்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளா்ச்சி முகமை), சீனிவாசன்(மகளிா் திட்டம்), சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT