கரூர்

‘மத்திய அரசு சிறுபான்மை விரோத போக்கோடு செயல்படுகிறது’

DIN

மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கான நிதித் திட்டங்களை குறைத்துள்ளது அதன் சிறுபான்மை விரோதப் போக்கைக் காட்டுகிறது என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் பள்ளப்பட்டி நகா் மன்ற உறுப்பினா் அலுவலக திறப்பு விழா மற்றும் கட்சிக் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

சிறுபான்மை மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை நடப்பு ஆண்டில் 44 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின் தங்கிய சிறுபான்மை மாணவா்களுக்கான உதவித்தொகையை குறைப்பது பாஜக அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை காட்டுகிறது.

ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியையும் பாஜக அரசு குறைத்துள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னத்தை சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் அமைக்க வேண்டும். ராகுல் காந்தி நடத்திய யாத்திரை மதச்சாா்பற்ற அனைத்து தரப்புக்கும் புத்துணா்ச்சியை அளித்துள்ளது. எதிா்க்கட்சியினா் அனைவரும் ஓரணியில் இணைந்தால் நிச்சயம் பாஜகவை வீழ்த்த முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT