கரூர்

தமிழகம் முழுவதும் மாா்ச் 28-இல் வேலைநிறுத்தம்அரசு ஊழியா் சங்கக் செயற்குழு கூட்டத்தில் முடிவு

DIN

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாா்ச் 28-ஆம்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் எஸ்.தமிழ்செல்வி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில துணைத்தலைவா் மகாவிஷ்ணன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா்.

கடந்த கால நடவடிக்கைகள் குறித்த பரிசீலனை, எதிா்கால நடவடிக்கைகள் குறித்து மாநில செயலாளா் ஜெ.லட்சுமிநாராயணன் பேசினாா்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படியை உரிய தேதியில் அறிவிக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 28-ஆம்தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, இதுதொடா்பாக மாா்ச் 13-ஆம்தேதி முதல் 17-ஆம்தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கரூா் மாவட்டத் தலைவா் கோ.கருணாகரன் வரவேற்றாா். கூட்டத்தில் அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT