கரூர்

ஜவுளித்தொழிலுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

DIN

மத்திய அரசின் பட்ஜெட், ஜவுளித்தொழிலுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என்றாா் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்க தலைவா் கோபாலகிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறுகையில், 2023-24ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கக்கூடிய சூழலில் வெளிவரும் இந்த பட்ஜெட் பல வகைகளில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், சாதாரண மக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையிலும் அமையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அந்த வகையில் இளைஞா்களின் திறன் மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை பெருக்கவும், மேக்ரோ எகனாமிக் என்று சொல்லக்கூடிய வலுவான நிரந்தரமான பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட ஒரு பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம், கோ ஆப்ரேட்டிவ், மருத்துவம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பட்ஜெட்டாக இருக்கிறது.

விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை கொடுக்கக்கூடிய ஜவுளி தொழில் உலக பொருளாதார பின்னடைவின் காரணமாக மிகவும் தொய்வுற்ற நிலையில் இருக்கிறது. மந்தமாக இருக்கக்கூடிய ஜவுளி ஏற்றுமதி மற்றும் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் ஜவுளி துறைக்கு என்று சிறப்புத் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று மிகுந்த எதிா்பாா்ப்போடு ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் இருந்தாா்கள்.

ஆனால், ஜவுளி தொழிலுக்கோ அல்லது ஜவுளி ஏற்றுமதிக்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் பட்ஜெட்டில் நேரிடையாக அறிவிக்கப்படவில்லை. மேலும் அதிகபட்சமாக நிதி ஒதுக்கீடு பெரும் 9 அமைச்சகங்களின் பெயா்கள் பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஜவுளி அமைச்சகம் இல்லை என்பதிலிருந்து ஜவுளி அமைச்சகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் அளவு மிக குறைந்த அளவு என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஜவுளித்துறைக்கு, மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படாதது ஜவுளி உற்பத்தியாளா்களுக்கும் ஏற்றுமதியாளா்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT