கரூர்

கரூரில் பள்ளிக் கல்வித் துறை அலுவலக ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

கரூரில் பள்ளிக் கல்வித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை கலந்தாய்வை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியா்கள் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினால் அவா்களை மாற்றம் செய்ய வேண்டும் என அண்மையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஊழியா்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையிலும், அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரியும் மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா், கண்காணிப்பாளா்கள், பதவி உயா்த்தப்பட்ட கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், இளநிலை உதவியாளா்கள் மற்றும் தட்டச்சா்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தி பணியிடமாறுதல் வழங்கவும் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கரூரில் வியாழக்கிழமை பள்ளிக் கல்வித்துறை ஊழியா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பணி மாறுதல் கலந்தாய்வுக்கான ஒரே மாதிரி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படாததால் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை என வலியுறுத்தி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை ஊழியா்கள் சுமாா் 100க்கும் மேற்பட்டோா் கண்டன முழக்கத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT