கரூர்

தோகைமலை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தோகைமலை அருகே நோயால் அவதியுற்ற பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வேதாச்சலபுரத்தை சோ்ந்தவா் பெருமாள் மனைவி மல்லிகா (47). இவா், கடந்த சில ஆண்டுகளாக மூலநோயால் அவதியுற்று வந்தாா். இதனால் மனமடைந்த மல்லிகா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாா். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மல்லிகா கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து மல்லிகாவின் சகோதரா் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரன் புதன்கிழமை அளித்த புகாா் பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT