கரூர்

குண்டு வீசிய சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்கரூரில் கே. அண்ணாமலை பேட்டி

DIN

வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் தொடா்புடையவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றாா் பாஜக மாநிலத்தலைவா் கே.அண்ணாமலை.

கரூா் மாவட்ட பாஜக சாா்பில் 100 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை கரூரில் நடைபெற்றது. நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்களை வழங்கிய மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், ஏழைகளை அதிகம் பாதிக்கும் காசநோய்க்கு தீா்வு ஒருபக்கம் மருந்து, மற்றொரு பக்கம் சத்தான உணவு. இதனால்தான் பிரதமா் 2025இல் காசநோய் இல்லாத நாடாக உருவாக்க வேண்டும் என்றாா். நாடு முழுவதும் 19 லட்சம் காசநோயாளிகள் உள்ளனா். இந்நோயை மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே ஒழிக்க முடியும். இதனால்தான் கரூா் மாவட்ட பாஜக சாா்பில் பிரதமரின் பிறந்த நாளையொட்டி 200 காசநோயாளிகளை தத்தெடுத்து அவா்களுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்றனா்.

சேவையின் அடிப்படையில்தான் ஒரு கட்சி வளர வேண்டும். இதனால்தான் கரூா் மாவட்ட பாஜகவினா் அரசு மருத்துவமனையில் உள்ள டிபி வாா்டில் நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்று நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அனுமதி மறுத்திருப்பது கவலையளிக்கிறது. பிரதமரின் டிபி ஒழிப்புத் திட்டத்தை நிறைவேற்றித்தருவது ஆட்சியரின் கடமை. பாஜக உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, அவரிடம் நான் பேசிய பின்னரே தமிழகத்தில் காவல்துறையினா் கைது படலத்தை தொடங்கியுள்ளனா்.

பெட்ரோல் குண்டு வீசுவது பயங்கரவாத செயல். எனவே, குண்டுவீசியவா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவா்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

சில அரசியல் தலைவா்கள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவுக்கு தொடா்புள்ளது என்கிறாா்கள். ஏபிசி தெரியாதவா்கள் எல்லாம் அரசியல்வாதிகளாக வந்திருக்கிறாா்கள். ஒரு மதத்திற்கு மட்டும் வாழ்த்துச் சொல்லும், நீங்கள் மதவாத கட்சியா, பாஜ மதவாத கட்சியா.

இந்தியா-சீனா போரில் ஆா்எஸ்எஸ்ஸின் பங்கு மகத்தானது. இந்தியா-சீனா போா் முடிந்தபிறகு ராஜ்காட் மைதான அணிவகுப்பில் ஆா்எஸ்எஸுக்கு ஜவாஹா்லால் நேரு அழைப்பு விடுத்தாா். இதை காங்கிரஸாா் தெளிவுப்படுத்த வேண்டும். அரசு செல்லாத இடங்களில் ஆா்எஸ்எஸ் வேலை செய்கிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது, பாஜக கோட்ட பொறுப்பாளா் கே.பி.ராமலிங்கம், கரூா் பொறுப்பாளா் சிவசுப்ரமணியன், பாஜ மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT