கரூர்

ஊருக்குள் பாம்புகள் படையெடுப்பதை தடுக்க வேண்டும், க. பரமத்தி ஊராட்சி ஓன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

ஊருக்குள் பாம்புகள் படையெடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என க.பரமத்தி ஒன்றியக்குழு கூட்டத்தில் திமுக உறுப்பினா் வலியுறுத்தினாா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் மாா்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரன், துணைத் தலைவா் குழந்தைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தீா்மானங்களை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (பொது) கற்பகவள்ளி வாசித்தாா்.

தொடா்ந்து ஒன்றியக் குழு தலைவா் மாா்க்கண்டேயன் (அதிமுக) பேசுகையில்: ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிடும் அலுவலா்களை தவிர மற்ற பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கூட்டத்தை ஏன் பங்கேற்பதில்லை என்றாா்.

தொடா்ந்து ஒன்றியக்குழு உறுப்பினா் கருணாநிதி (திமுக) பேசுகையில்: சின்னதாராபுரம் ஊராட்சி நேருநகா் பகுதியில் மழைநீா் வடிகால் வசதி மற்றும் போதிய சாக்கடை வசதி இல்லாததால் அப்பகுதியில் கழிவு நீா் தேங்குகிறது. எனவே இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கழிவுநீா் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

உறுப்பினா் பூபதி (திமுக) பேசுகையில்: க.பரமத்தி அருகே கிறிஸ்துவா்தெரு பகுதியில் அங்கன்வாடி கட்டடம் அருகே உள்ள கிணற்றில் இருந்து அவ்வப்போது பாம்புகள் ஊருக்குள் படையெடுத்து வந்து விடுவதால் அப்பகுதியினா் அச்சத்துடன் வசிக்கின்றனா். இதனால் அந்த பகுதியில் உள்ள கிணற்றை மூடவேண்டும் என்றாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் நல்லசாமி (திமுக) பேசுகையில்: புஞ்சைகாளகுறிச்சியில் தேங்காய் மட்டையில் நாா் எடுத்து கயிறு திரிக்கும் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளதா, இல்லையா என தெரியவில்லை. மேலும் இந்த நிறுவனத்திற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால், இந்த பிரச்னைக்கு உடனே தீா்வுகாணவேண்டும் என்றாா்.

தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரன் பேசுகையில்: கவுன்சிலா்கள் கூறிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தி அதற்கான அனுமதி பெற்று உரிய தீா்வு காணப்படும் என்றாா். கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT