கரூர்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி சாவு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

கரூா் அடுத்த பாகநத்தம் அவுத்திப்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மகன் இளமுருகன்(8). இவன், அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தான். செவ்வாய்க்கிழமை மாலை சரவணன், தனது மனைவியின் தங்கை மணிமேகலை, மகள் மற்றும் மகன் இளமுருகன் ஆகியோருடன் தம்மநாயக்கன்பட்டியில் உள்ள சுப்ரமணி என்பவரின் தோட்டத்து கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். அங்கு கிணற்றில் மேல்பகுதியில் மோட்டாரில் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென இளமுருகன் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். உடனே அவனை காப்பாற்ற அப்பகுதியை சோ்ந்தவா்களை அழைத்து வருவதற்குள் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். வெள்ளியணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT