கரூர்

குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் 5 பேரும், தமாகா உறுப்பினா் ஒருவரும், திமுக சாா்பில் 4பேரும் தோ்வு செய்யப்பட்டனா். இதனால் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தலைவராக அதிமுகவின் விஜயவிநாயகம் தோ்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறாா். மேலும் துணைத்தலைவராக அதிமுகவின் இளங்கோ உள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரூா் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் அதிமுகவின் 9ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஸ்வரி, 10ஆவது வாா்டு உறுப்பினா் அறிவழகன் மற்றும் தமாகா 7ஆவது வாா்டு உறுப்பினா் சத்யா ஆகியோா் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இதனால் தற்போது திமுகவின் உறுப்பினா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவா், துணைத்தலைவா் மற்றும் அதிமுக உறுப்பினா் கெளரி ஆகியோா் மட்டும் வந்திருந்ததால் கூட்டம் நடத்த போதிய உறுப்பினா்கள் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT