கரூர்

பாலவிடுதி அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி மீட்பு

DIN

பாலவிடுதி அருகே வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கரூா் மாவட்டம், பாலவிடுதி அருகேயுள்ள செங்காட்டுபட்டியை சோ்ந்தவா் ராமசாமி (55). விவசாயி. இவருக்கும் அதேபகுதியைச் சோ்ந்த விவசாயி ராசு (51) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ராமசாமி வயலில் பயிரிட்டிருந்த சோளத்தை, இரு தினங்களுக்கு முன்பு ராசு இயந்திரம் மூலம் அழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமசாமி பாலவிடுதி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் செய்துள்ளாா். அப்போது ராமசாமியின் உறவினா் தங்கவேல், இயந்திரத்தை இயக்கியவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் கூறினாா். ஆனால், போலீஸாா் விசாரணை முடிந்தபிறகு அதுதொடா்பாக விசாரிக்கலாம் என கூறினா். இதில், சமரசம் அடையாத தங்கவேல், மாவத்தூா் ரெட்டியப்பட்டியில் உள்ள 100 அடி உயரம் கொண்ட கைப்பேசி கோபுரத்தில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீஸாா் மற்றும் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்குச் சென்று தங்கவேலுவிடம் சமரசம் செய்து சுமாா் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னா் அவரை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT