கரூர்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் மருத்துவா்களை நியமிக்க வலியுறுத்தல்

26th May 2022 05:43 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் சுழற்சி முறையில் மருத்துவா்களை நியமிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒன்றியக் குழுவினா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பது: அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகளில் இரவு நேரத்தில் மருத்துவா்கள் பணியில் இல்லாததால் அவசர உதவிக்கு வரும் நோயாளிகள் கரூா் செல்லவேண்டிய நிலை உள்ளது. மேலும், இரவு பணிகளில் உள்ள செவிலியா்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று மருத்துவம் பாா்க்கும் நிலை இருந்து வருகிறது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சுழற்சி முறையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT