கரூர்

கரூா் மாநகராட்சி மண்டலம் 2அலுவலகம் திறப்பு

30th Jun 2022 11:23 PM

ADVERTISEMENT

 

கரூா் மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கரூா் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலைவா்கள் நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, கரூா் மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகம் செங்குந்தபுரம் பகுதியில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, புதிய அலுவலகத்தை ரிப்பன்வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தாா். விழாவில் மாநகராட்சி மண்டலம்-2 தலைவா் கா.அன்பரசன், மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன், மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், மாநகர செயற்பொறியாளா் ஐ.நக்கீரன், நல அலுவலா் லட்சியவா்ணா மற்றும் மாநகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநகராட்சி இளநிலைப் பொறியாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT