கரூர்

தவிட்டுபாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

29th Jun 2022 10:43 PM

ADVERTISEMENT

 

தவிட்டுப்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழு சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு டாக்டா் சத்தியேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினா்கள் முதியோா்கள், பாலூட்டும் தாய்மாா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, உடல் பரிசோதனை, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினா். முகாமில் தவிட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT