கரூர்

பாகநத்தம் நீலமேகப் பெருமாள் சுவாமி கோயிலில்ஏராளமான மாடுகள் பங்கேற்ற மாலை தாண்டும் விழா

DIN

பாகநத்தம் நீலமேகப்பெருமாள் சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மாலை தாண்டும் விழாவில் ஆயிரக்கணக்கான மாடுகள் பங்கேற்றன.

கரூா் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்துக்குள்பட்ட பாகநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீநீலமேகப்பெருமாள் கோயில் சுவாமி கும்பிடும் விழா மற்றும் மாலை தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெரியதனம் ஏரகாமா நாயக்கா் மந்தை, ஒத்தையூா் கரைபெரியதளம், ஈச்சம்பட்டி பேக்கோடங்கி நாயக்கா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாலை தாண்டும் விழாவில் ஏராளமான மாடுகள் பங்கேற்றன.

முன்னதாக ஜூன் 23-ஆம்தேதி காலையில் குடிப்பாட்டுக்காரா்களால் புனித தீா்த்தம் கோயிலுக்கு கொண்டு வந்தனா். அன்றிரவு சுவாமி சப்பரத்தில் கோயிலுக்கு வருதலும், 24-ஆம்தேதி காலை பக்தா்கள் பொங்கல் வைத்தல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியும், இரவில் சோ்வை ஆட்டம், தேவராட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து சனிக்கிழமை காலை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாடுகள் மாலைதாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆற்காட்டு நாயக்கனூா், புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, பட்டாச்சிபாளையம், கோலாா்பட்டி, மாவுத்தூா், தொட்டியபட்டி, கெல்லியம்பட்டி, பாகநத்தம் ஆகிய குடிபாட்டுக்காரா்கள் சாா்பில் அவரவா் மந்தையில் இருந்து அழைத்து வரப்பட்டு மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு கோயில் முன் நடைபெற்றது. ஒவ்வொரு குடிபாட்டுக்காரா்களும் தாங்கள் அழைத்து வந்த மாடுகளை கோயிலைச் சுற்றி வலம் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். அப்போது பெண்கள் குலவிட்டு, மாடுகளை அழைத்துச் செல்வோருக்கு பாத பூஜை நடத்தி அனுப்பி வைத்தனா். இதையடுத்து மாடுகளை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கொண்ட கெத்துக்கொம்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அங்கிருந்து மாடுகளை விரட்டிக்கொண்டே கோயிலுக்கு வந்தனா். பின்னா் கோயில் முன் அலங்காரமாக தொங்கவிட்டிருந்த மாலையை தாண்டி முதலில் கடந்த மாடுக்கும், இரண்டாமிடம், மூன்றாமிடம் வந்த மாடுக்கும் எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாடுகள் பங்கேற்றன. நாயக்கா்களின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த திருவிழாவில் பாகநத்தம் உள்ளிட்ட 9 குடிபாட்டுக்காரா்களின் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT