கரூர்

போதை பொருள்களை பதுக்கியவா் கைது

6th Jul 2022 11:13 PM

ADVERTISEMENT

 

கரூரில், தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை பதுக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அடுத்த கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(44). இவா், தற்போது கரூா் மாவட்டம் வாங்கல் அடுத்த பெரியவடுகப்பட்டியில் வாடகை வீட்டில் தங்கி, அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவா் வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக ஆத்தூா் கிராம நிா்வாக அலுவலா் குப்புசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குப்புசாமி வாங்கல் காவல்நிலையத்ிதல் செவ்வாய்க்கிழமை இரவு புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் முருகன் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.51,390 மதிப்புள்ள 107.440 கிலோ எடைகொண்ட குட்கா, பான்மசாலா பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவான முருகனை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT