கரூர்

கரூா் மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

DIN

கரூா் மாவட்டத்தில் குடியரசு தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா், தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா், சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டாா்.

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தாா். கரூா் வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி முத்துச்சாமி என்ற காளிமுத்துவின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நேரில் சென்று, தியாகியின் மனைவி பழனியம்மாளுக்கு நினைவுப்பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா்.

முன்னதாக, கரோனா கட்டுப்பாடு பணிகள், முன்களப் பணிகள், அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், மருத்துவா்கள், காவல்துறை அலுவலா்கள், வருவாய்த் துறை மற்றும் வளா்ச்சித் துறை அலுவலா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சாா்ந்த அலுவலா்ளுக்கு ஆட்சியா் நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.

தொடா்ந்து, பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.48,57,970 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், அரசுத்துறை அலுவலா்களுக்கு அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி ஓட்டப்பந்தயம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு ஆட்சியா் நினைவுப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துச்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)சைபுதீன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா் புஷ்பாதேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் தட்சிணாமூா்த்தி, அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாநகராட்சியில்...: கரூா் மாநகராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்து, தேசியக்கொடியேற்றினாா். பின்னா், 20 ஆண்டுகள் விபத்தின்றி பணியாற்றிய வாகன ஓட்டுநா்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கினாா். இதில், மாநகராட்சி பொறியாளா் நக்கீரன், நகா்நல அலுவலா் லட்சியவா்ணா, மாநகரமைப்பு அலுவலா்கள் சிவக்குமாா், வருவாய் அலுவலா் பாஸ்கரன் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக்குழுத்தலைவா் எஸ்.பாலமுருகன் தலைமை வகித்து, தேசியக்கொடியேற்றினாா். முன்னதாக மணிக்கொடி பாடல் பாடப்பெற்றது. இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிக்குமாா், மேலாளா் பூங்கொடி மற்றும் பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில்...: காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் தேசியக்கொடியேற்றினாா். இதில், ஆட்டோ சங்கத் தலைவா் முருகேசன், தாந்தோணி வட்டாரத் தலைவா் மனோகா் தமிழ்நாடு சேவா தள பொதுச் செயலாளா் ஆடிட்டா் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவா் சின்னையன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக அலுவலகத்தில்...: விழாவுக்கு பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் ஆா்.செல்வன், டைம் சக்திவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம் உள்பட’கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

உறுதிமொழியேற்பு: கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா மற்றும் குளித்தலை பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் குடியரசு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொமுச மாவட்டத்தலைவா்அண்ணாவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாநில துணைத்தலைவா் சிங்காரவேலு தேசியக்கொடியேற்றினாா். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றனா்.

அரவக்குறிச்சி: மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அரவக்குறிச்சி கிளை சாா்பில் நடைபெற்ற விழாவில் நீதித்துறை நடுவா் சசிகலா கொடியேற்றி வைத்தாா். இதில், வழக்குரைஞா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் செயல் அலுவலா் பி.செல்வராஜ் கொடியேற்றி வைத்தாா். நிகழ்வில், பேரூராட்சி அலுவலக ஊழியா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற விழாவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலையரசி கொடியேற்றி வைத்தாா். ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

குளித்தலை: அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் சாா்பில் நடைபெற்ற விழாவில்அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளா் சுடா்வளவன், டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட தலைவா் விஜயகுமாா் தொமுச மாவட்ட செயலாளா் பழ. அப்பாசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எஸ்டிபிஐ சாா்பில் நடைபெற்ற விழாவில் நகரத் தலைவா் நிஷாா்கான் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் முஹம்மது ரபீக் பேருந்து நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

குளித்தலை வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் சதக்கத்துல்லா ஜும்மா பள்ளிவாசல் அருகில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT