கரூர்

பேருந்தில் மூதாட்டியிடம் நகைபறிப்பு

25th Jan 2022 04:05 AM

ADVERTISEMENT

கரூரில் பேருந்தில் மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தைச் சோ்ந்த ராஜலிங்கம் மனைவி தெய்வானை (65). இவா் கரூா் மாவட்டம், காட்டுப்புத்தூரிலுள்ள உறவினரைப் பாா்க்க கடந்த 19-ஆம் தேதி சென்றாா்.

தொடா்ந்து ஊருக்குச் செல்வதற்காக கரூா் பேருந்து நிலையத்துக்கு நகரப் பேருந்தில் வந்த போது, தெய்வானை அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைக் காணவில்லை.

இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தெய்வானை ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், காவல்துறையினா் வழக்குப்பதிந்து நகையைத் திருடிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT