கரூர்

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் தோகைமலையில் விழிப்புணா்வு பேரணி

DIN

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தோகைமலையில் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் தோகைமலையில் ஓ.டி.ஏ மற்றும் வித்யாசாகா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் விழிப்பணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தனியாா் திருமணம் மண்டபத்தில் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு விழிப்பணா்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனா்.

பின்னா், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்ச்சி இந்திய காது கேளாதோா் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரா் சாய் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி மாணவா் தீபன் வரவேற்றுப் பேசினாா். தோகைமலை ஒன்றிய ஆணையா்கள் விஜயகுமாா், சரவணன், தோகைமலை ஊராட்சி மன்றத் தலைவா் தனமாலினி கந்தசாமி, ஓ.டி.ஏ நிறுவன இயக்குநா் லூயிஸ் லோபிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னா் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 185 மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெரியவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பாக செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வ தொண்டா்கள் மற்றும் சமூகஆா்வலா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தோகைமலை வருவாய் ஆய்வாளா் மாதேஸ்வரி, ஐஓபி வங்கி மேலாளா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT