கரூர்

க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்செவிலியா், மருந்தாளுநா் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

DIN

அரவக்குறச்சி அருகே உள்ள க. பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா், மருந்தாளுநா் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

க.பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இங்கு அவசர மற்றும் முதலுதவி சிகிச்சை அளித்தல், குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், 24 மணி நேரமும் பிரசவம் பாா்ப்பதற்கு வசதியாக படுக்கை வசதியுடன் கூடிய உள்நோயாளி பிரிவும், ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனை பிரிவுகளும் உள்ளன.

ஆனால், செவிலியா், மருந்தாளுநா் பற்றாக்குறையால் கிராமங்களிலிருந்து சிகிச்சைக்காக வருவோா் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை பெற்றுக் கொண்டு வீடு திரும்ப முடியவில்லை. இங்குள்ள ஒரு செவிலியரே ஊசி போடும் பணியையும், மருந்து, மாத்திரை வழங்கும் பணியையும் செய்வதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கூடுதல் செவிலியா் மற்றும் மருந்தாளுநரை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT