கரூர்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தக் கூடாதுமின் ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தல்

18th Aug 2022 11:52 PM

ADVERTISEMENT

 

மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தக்கூடாது என கரூா் மாவட்ட மின் ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் மாவட்ட மின் ஓய்வூதியா் சங்க ஆண்டு விழா வியாழக்கிழமை சங்கத் தலைவா் இரா.ஜவஹா் தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளா் கோபாலன் வரவேற்றாா். செயலாளா் ராஜகோபால் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் சின்னசாமி வரவு- செலவு அறிக்கை வாசித்தாா்.

கெளவரத்தலைவா் சிவராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியா் சங்கங்களின் சம்மேளனத் தலைவா் ஸ்ரீதரன், பொதுச் செயலாளா் ஜெகநாதன், பொருளாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

ADVERTISEMENT

விழாவில், மத்திய அரசு போன்று மாநில அரசும் அகவிலைப்படியை 1.1.2022 முதல் வழங்க வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் மின்வாரிய பணியாளா்கள், அலுவலா்கள், ஓய்வூதியா்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவாா்கள். எனவே, இந்த மசோதாவை அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் மின்வாரிய ஓய்வூதியா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT