கரூர்

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

11th Aug 2022 11:47 PM

ADVERTISEMENT

 

அரவக்குறிச்சி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அம்மாசி மனைவி ரங்கம்மாள் (69). இவா், வியாழக்கிழமை அதிகாலை மாயனூரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக பேருந்தில் ஈரோட்டில் இருந்து கரூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது தென்னிலையில் உள்ள பேக்கரியில் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக சாலையை கடக்க முயன்றாா். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முதல்வா்பட்டி பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் கந்தசாமி (22) என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ரங்கம்மாள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரங்கம்மாள் உடனடியாக கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். தென்னிலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT