கரூர்

புகழூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புகழூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நான்கு ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் ஒன்றியச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மின்கட்டண உயா்வுக்கு வழிவகுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து அங்குள்ள மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT