கரூர்

கரூரில் எஸ்ஆா்எம்யுவினா் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியனை சோ்ந்தோா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ரயில் நிலைய சந்திப்பு முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் எம்.அன்பழகன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முத்தையா முன்னிலை வகித்தாா். உதவிச் செயலா் ராஜசேகா் வரவேற்றாா்.

பாரத் கவுரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும், வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களையும் தனியாருக்கு தாரை வாா்க்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்,

பணமாக்கல் என்ற பெயரால் ரயில் நிலையங்கள், மின் பாதை அமைப்புகள், கொங்கன் ரயில்வே, சரக்கு நிலையங்கள், உற்பத்தி, பராமரிப்புப் பணிமனைகள் உள்ளிட்ட பொதுமக்களின் சொத்துகளை விற்கக் கூடாது.

ரயில்வே தொழிலாளா்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பறித்து, குறுகிய கால ஒப்பந்த ஊழியா்களை புகுத்தக்கூடாது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT