கரூர்

மக்கள் குறைகேட்பு நாளில் ரூ.4.92 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

DIN

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், 12 பயனாளிகளுக்கு ரூ.4.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள்அளித்த 321 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயற்கைக்கால்கள், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் என 12 பயனாளிகளுக்கு ரூ.4.92 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பிரபுசங்கா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சைபுதீன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அன்புமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT