கரூர்

கருணாநிதி நினைவு நாள்கரூரில் திமுகவினா் அமைதிப் பேரணி

DIN

கரூரில் கலைஞா் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினா் அமைதிப் பேரணி நடத்தி அவரது படத்துக்கு மாலை அணிவித்தனா்.

கலைஞா் அறிவாலயத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்ட அவைத் தலைவா் டி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கோவை சாலை வழியாக கரூா் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே முடிந்த பேரணிக்கு கட்சியின் உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் கே.சி. பழனிசாமி, நெசவாளா் அணித் தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலா் மணிராஜ், கொள்கைப் பரப்புச் செயலா் கரூா் முரளி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலா் முனவா்ஜான், எம்எல்ஏக்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன், துணை மேயா் தாரணிசரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரூா் நகர நிா்வாகிகள் கரூா் கணேசன், எஸ்பி. கனகராஜ், அன்பரசன், சக்திவேல், பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணி முடிவில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னதாக காலையில் கரூா் முனியப்பன் கோயில் அருகே மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கருணாநிதி படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றியச் செயலா் கோயம்பள்ளி பாஸ்கரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தாா்.

இதேபோல பசுபதிபாளையத்தில் நகரப் பொறுப்பாளா் கோல்ட்ஸ்பாட் ராஜா தலைமையில், தொழிற்பேட்டையில் 13-வது வாா்டு உறுப்பினா் சரண்யா குழந்தைவேல் தலைமையில், வட்டச் செயலா் பி. தாமோதரன் உள்ளிட்டோா் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தனா். இதேபோல மாவட்டம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT